குஷியில் மாணவர்கள்..! மதிய உணவில் சிக்கன்..!
மேற்கு வங்கத்தில், பள்ளி மாணவ மாணவிகளுக்கு மதிய உணவுடன் சிக்கன் மற்றும் பருவ கால பழங்கள் வழங்க முடிவு.
மேற்கு வங்கத்தில் உள்ள பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்பட்டு வரும் நிலையில், ஏற்கனவே மதிய உணவில் தானிய வகைகள், காய்கறிகள் மற்றும் முட்டை போன்றவை வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பள்ளி மாணவ மாணவிகளுக்கு மதிய உணவுடன் சிக்கன் மற்றும் பருவ கால பழங்கள் வரும் நான்கு மாதங்களுக்கு வழங்க மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது.
இதனையடுத்து இதற்காக ரூ.376 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. இது குறித்து மாநில அரசு தரப்பில் கூறுகையில், இதன் மூலம் மாணவர்களுக்கு கூடுதல் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் என்றும், இது போஷன் அபியான் திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.