அவசர சிகிச்சை பிரிவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மாற்றம்!
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு கண்டனம் தெரிவித்தும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், போராட்டத்தில் ஈடுபட்டு கைதான அவர், புழல் சிறையில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கேட்டுக்கொண்டைதையடுத்து உண்ணாவிரதத்தை கைவிட்ட வேல்முருகன் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.