8 ஐஎஸ் தீவிரவாதிகளை சுட்டு கொன்ற தாலிபான்கள்..!
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் நடத்திய தாக்குதலில் 8 ஐஎஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானின் ஆளும் தலிபான்கள் காபூலில் பல தாக்குதல்களில் முக்கிய பிரமுகர்களை குறிவைத்து நடத்திய தொடர் சோதனையில் 8 இஸ்லாமிய தீவிரவாதிகளை சுட்டு கொன்றுள்ளனர். மேலும் 9 பேரை கைது செய்ததாக தலிபான் அரசாங்கத்தின் மூத்த செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
தலிபான் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறுகையில், தலைநகர் மற்றும் மேற்கு நிம்ரோஸ் மாகாணத்தில் புதன்கிழமை நடத்தப்பட்ட சோதனைகளில், காபூலின் லோங்கன் ஹோட்டல், பாகிஸ்தான் தூதரகம் மற்றும் இராணுவ விமான நிலையம் மீது சமீபத்திய தாக்குதல்களை ஏற்பாடு செய்த ஐஎஸ் தீவிரவாதிகளை குறிவைத்து சோதனை மேற்கொண்டனர்.
இதில், வெளிநாட்டினர் உட்பட எட்டு ஐஎஸ் போராளிகள் கொல்லப்பட்டனர். ஒன்பது பேர் காபூலில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள், ஹோட்டல் மீதான தாக்குதலில் முக்கிய பங்கு வகித்தனர். வெளிநாட்டு ஐஎஸ் உறுப்பினர்கள் ஆப்கானிஸ்தானுக்கு வர வழி வகுத்தனர்” என்று கூறினார்.
மேலும், ஆப்கானிஸ்தான் தலைநகர் ராணுவ விமான நிலையத்தில் சோதனைச் சாவடி அருகே நடந்த பயங்கர குண்டுவெடிப்புக்கு இஸ்லாமிய அரசு குழு பொறுப்பேற்றுள்ளது.