2500 கோவில்களின் திருப்பணிக்கு 2 லட்சம் நிதி.! முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.!
தமிழக கிராமப்புறங்களில் உள்ள 2,500 கோவில்களுக்கு தலா 2 லட்சம் வீதம் நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னையில் இன்று அறநிலையத்துறை சார்பில் தமிழக கோவில்களின் புனரமைப்பு பணிகளுக்காக நிதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு கோவில் நிர்வாகிகளிடம் நிதி வழங்கி வருகிறார்.
தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள 1,250 கோவில்கள், பழங்குடியினர் பகுதியில் உள்ள 1,250 கோவில்கள் என 2,500 கோவில்களுக்கு தலா 2 லட்ச ரூபாய் வழங்கப்படுகிறது.
இந்த நிதியை பயன்படுத்தி கோவில் பூணரமைப்பு பணிகள், பக்தர்களுக்கு தேவையான வசதிகள், தேர் புனரமைப்பு, குளம் புதுப்பித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, பல்வேறு கோவில்களை சேர்ந்த அதீனங்கள், 2500 கோவில் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.