சீன சிப்புக்களின் பயன்பாடுகளை நிறுத்தும் டெல்(Dell)..வெளியான தகவல்..!
டெல்(Dell) நிறுவனம் சீனாவில் தயாரிக்கப்பட்ட மென்பொருள் உதிரிபாகங்களைப் பயன்படுத்துவதை நிறுத்தத் திட்டமிட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்குள் சீனாவில் தயாரிக்கப்பட்ட மென்பொருள் உதிரிபாகங்களை பயன்படுத்துவதை நிறுத்துவதற்கு டெல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும் அமெரிக்கா-பெய்ஜிங் பதட்டங்களினால் ஏற்பட்ட கவலைகளுக்கு மத்தியில், டெல் அதன் தயாரிப்புகளில் சீனாவில் தயாரிக்கப்பட்ட உபகரணங்கள் மற்றும் சீன சிப்புகளின் அளவைக் குறைக்குமாறு சப்ளையர்களிடம் கூறியுள்ளது.
டெல் நிறுவனம் பயன்படுத்தும் சீனாவில் தயாரிக்கப்பட்ட மென்பொருள் உதிரிபாகங்களின் அளவை அர்த்தமுள்ள வகையில் குறைப்பதை தங்களுடைய நோக்கமாகக் கொண்டுள்ளது, என்று முன்பே சப்ளையர்களிடம் கூறியுள்ளது.