மழைநீர் வடிகாலில் 1,310 கழிவுநீர் குழாய் இணைப்பு.! 3 லட்ச ரூபாய் அபராதம் விதித்த சென்னை மாநகராட்சி.!
சென்னை மாநகராட்சியில் கடந்த 2 வாரம் வரையில் நடத்திய ஆய்வில் 1,310 இணைப்புகள் சட்டவிரோதமாக மழைநீர் வடிகளுடன் கழிவுநீர் குழாய் இணைக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அண்மையில் மழைநீர் வடிகால் பற்றியும், சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகள் பற்றியும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் குழாய் இணைப்புகளில் சட்டவிரோதமாக கழிவுநீர் குழாய்களை பலர் இணைத்துள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த 2 வாரம் வரையில் 1,310 இணைப்புகள் சட்டவிரோதமாக இணைக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் 3.12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கபட்டுள்ளது. மழைநீர் வடிகால்களில் கழிவுநீர் குழாய்களை வெளியேற்றும் பணிகளை மக்கள் தவிர்க்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.