டெல்லி சம்பவத்தை போல சுவிகி ஊழியருக்கு நேர்ந்த துயரம்.! காருக்கு கீழே இழுத்து சென்றதால் உயிரிழந்த பரிதாபம்.!

Default Image

உத்திர பிரதேச மாநிலம் நொய்டாவில் சுவிகி டெலிவரி ஊழியர் மீது கார் மோதி சில கிமீ தூரம் இழுத்து சென்றதில் அந்த இளைஞர் உயிரிழந்துள்ளார். 

டெல்லியில் புத்தாண்டு அன்று இளம்பெண் ஒருவர் கார் விபத்தில் சிக்கி, காருக்கு கீழே சில கிமீ தூரம் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்தார். அந்த சம்பவத்தை தொடர்ந்து அதே போல உத்திர பிரதேசத்தில் ஒரு பெண் டிரக்கின் கீழ் மாட்டி சில கிமீ தூரம் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்தார்.

தற்போது அதே போல, இன்னோர் சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. நொய்டா நகரில் நள்ளிரவில் உணவு டெலிவரி செய்யும் ஸ்விகியில் வேலை செய்யும் கவுஷல் எனும் நபர் மீது கார் ஒன்று மோதியுள்ளது.

அந்த காருக்கு அடியில் கவுஷல் சிக்கியுள்ளார். அவரை அந்த கார் 1 கி.மீ. தூரம் இழுத்து சென்றதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கவுஷல் காரில் சிக்கிக்கொண்டுள்ளது கார் ஓட்டுனருக்கு தெரிந்ததும், அவரது உடலை அங்கேயே விட்டுவிட்டு கார் ஓட்டுநர் தப்பியுள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்