அண்ணாமலை பத்திரிக்கையாளர்ளை மிரட்டி உருட்டி வருகிறார்.! சிபிஎம் தலைவர் கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்.!
முதிர்ச்சியற்று நடந்துகொண்டதை அண்மையில் பார்க்க முடிந்தது. – சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அண்மையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவர்ளிடம் நீங்கள் எந்த பத்திரிகை ஏன் கேள்வி கேட்கிறீர்கள் என்கிற தொனியில் பேச ஆரம்பித்தது தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையாக மாறியது.
அண்ணாமலையின் இந்த நடவடிக்கைக்கு பலரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த நடவடிக்கை குறித்து சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்னும் திருந்தவில்லை. என குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில், ‘ அண்ணாமலை சார்ந்துள்ள கட்சியாவது அவரை திருத்துமா என தெரியவில்லை. பத்திரிகையாளர்களை மிரட்டியும் உருட்டியும் வரும் அண்ணாமலையின் போக்கினை பத்திரிகையாளர் சங்கங்கள் பலமுறை கண்டித்துள்ளன. இருந்தாலும் அவர் முதிர்ச்சியற்று நடந்துகொண்டதை அண்மையில் பார்க்க முடிந்தது என தனதுவிமர்சனத்தை முன்வைத்தார் கே.பாலகிருஷ்ணன்.