ஒரே இரவில் 50,000 பேரை பிடுங்கி எறிய முடியாது உத்தரகாண்ட் ஆக்கிரமிப்பு- உச்சநீதிமன்றம் தடை
உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் உள்ள ரயில்வே நிலத்தில் ஆக்கிரமித்து இருப்பவர்களே வெளியேற்றும் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தடை விதித்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் உள்ள ரயில்வே நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து பிறப்பித்த உத்தரவில், “50,000 பேரை ஒரே இரவில் பிடுங்கி எறிய முடியாது” என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது உத்தரகாண்ட் அரசு மற்றும் இந்திய ரயில்வேக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.அதில்,நிலத்தில் புதிய கட்டுமானம் அல்லது மேம்பாடு எதையும் செய்யக்கூடாது என்றும் இந்த வழக்கின் அடுத்த விசாரணை பிப்ரவரி 7ஆம் தேதிக்கு என ஒத்திவைத்துள்ளது.
ஹல்த்வானியின் பன்பூல்புரா பகுதியில் உள்ள ரயில்வே நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அகற்ற உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் டிசம்பர் 20ஆம் தேதி உத்தரவிட்டது.இதனை எதிர்த்து ஹல்த்வானியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ சுமித் ஹிருதயேஷ் தலைமையில் உச்ச நீதிமன்றத்தை அணுகிய நிலையில் இந்த உத்தரவு வந்துள்ளது.