செயற்கை நுண்ணறிவு(AI) பொறுத்தவரை இந்தியா தான் நம்பர் 1- மைக்ரோசாப்ட் சிஇஓ புகழாரம்.!
செயற்கை நுண்ணறிவு(AI), என்று வரும்போது இந்தியா தான் முதலிடத்தில் இருப்பதாக சத்யா நடெல்லா கூறியுள்ளார்.
பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட்-இன் தலைமை நிர்வாக அதிகாரியான சத்யா நடெல்லா, தற்போது உலகளவில் பெருகிவரும் செயற்கை நுண்ணறிவு குறித்த கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, தற்போது உலக அளவில் அதிக மென்பொருள் உருவாக்குனர்கள் என்று பார்க்கும் போது இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
இந்தியாவிலிருந்து அதிக சாப்ட்வேர் என்ஜினீயர்கள் உலகெங்கும் பல முக்கிய நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர், மேலும் இந்தியா, செயற்கை நுண்ணறிவு திட்டங்களிலும் (ப்ராஜெக்ட்) நிறைய ஈடுபட்டு வருகிறது. உலகம் அடுத்தகட்டமான செயற்கை நுண்ணறிவை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.
அடுத்த யுகம் கண்டிப்பாக ஏ.ஐ(AI)யுகம் தான், இதன்படி, செயற்கை நுண்ணறிவு(AI), என்று பார்க்கும் போது இந்தியா தான் முதலிடத்தில் இருக்கிறது என்று சத்யா நடெல்லா மேலும் தெரிவித்தார்.