டெல்லி இளம்பெண் விபத்து வழக்கில் மேலும் 2 குற்றவாளிகள்.! சிறப்புக்குழு போலீசார் தகவல்.!
டெல்லி விபத்து சம்பவத்தை மறைக்க நினைத்ததாக இரண்டு பேர் மீது டெல்லி காவல் துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
புத்தாண்டு தினத்தில் டெல்லியில் இளம்பெண் மீது விபத்து ஏற்படுத்தி காருக்கு கீழே இழுத்து சென்ற சம்பவம் இன்னும் நாட்டில் அதிர்வலைகளை உண்டாக்கி தான் வருகிறது.
இந்த விபத்திற்கு காரணமான காரில் பயணித்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை, டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்த சிறப்பு பிரிவு போலீசார் சாகர் ப்ரீத் ஹூடா இந்த வழக்கு பற்றி பல்வேறு தகவல்களை கூறியுள்ளார்.
அவர் கூறுகையில் , இந்த சம்பவத்தில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் மேலும் 2 பேர் சம்பந்தப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த குற்றத்தை மறைக்க முயன்றனர் என கூறினார். அவர்கள் யார் என்கிற விவரம் இன்னும் வெளியாக வில்லை.