சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்கள் ஒன்றாக வந்தால் அதிமுக தான் வெற்றிபெறும்.! எஸ்.பி.வேலுமணி கருத்து.!
கோவையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புறக்கணித்து வருகிறார் என முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி .வேலுமணி கூறுகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை மாவட்டத்தை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். எனவும் இது குறித்து, திமுக கூட்டணி கட்சிகள் கூட அரசுக்கு எதிராக ஏதுவும் பேசமால் இருக்கிறது என்றும் தனது விமர்சனத்தை முன்வைத்தார்.
மேலும் அவர் கூறுகையில், தமிழகத்தில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடைபெற்ரால் அதிமுகதான் முழு வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி .வேலுமணி.