பள்ளி மாணவர்களுக்கு கூடுதலாக பேருந்து – மாநகர போக்குவரத்துக் கழகம்
கூடுதலாக பேருந்துகள் இயக்குவதன் மூலம் நாள் ஒன்றுக்கு 22,000 மாணவர்கள் பயணிக்க முடியும் என தகவல்.
சென்னையில் பள்ளி மாணவர்கள் செல்வதற்கு கூடுதலாக 20 பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. படிக்கட்டு பயணம், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் 12 வழித்தடங்களில் கூடுதலாக 20 பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கூடுதலாக 20 பேருந்துகள் இயக்குவதன் மூலம் நாள் ஒன்றுக்கு 22,000 மாணவர்கள் பயணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.