கடந்த 2 உலகக்கோப்பையில் இந்திய அணி செய்த மிக பெரிய தவறு இதுதான்.! கம்பீர் குற்றசாட்டு.!

Default Image

மூத்த வீரர்கள் தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாடததால், இந்திய கிரிக்கெட் அணி ஓர் உறுதியை உருவாக்கத் தவறியது, அது அணியின் வெற்றி வாய்ப்புகளை வெகுவாக பாதித்தது. – கம்பீர் கருத்து. 

இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக 2013-ல் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்று இருந்தது. அதன் பிறகு, அவர்கள் 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டு ODI உலகக் கோப்பை, 2014, 2016, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை, 2017 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2021 டெஸ்ட் சாம்பியன் கோப்பை ஆகிய ஐசிசி கோப்பைகளை வெல்ல தவறி வருகிறது என முன்னாள் கிரிகெட் வீரர் கம்பீர் தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

 மேலும், கடந்த இரண்டு உலகக்கோப்பையில் இந்தியா செய்த மிகப்பெரிய தவறு என தனது கருத்தையும் அதில் பதிவிட்டுள்ளார். அவர் கூறுகையில், விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, கே.எல். ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்ற மூத்த வீரர்களுக்கு அடிக்கடி கொடுக்கப்பட்ட ஓய்வுகள் அணியின் திறனை பாதிக்கிறது என்று  குறிப்பிட்டார்.

மேலும், இந்த மூத்த வீரர்கள் தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாடததால், இந்திய கிரிக்கெட் அணி ஓர் உறுதியை உருவாக்கத் தவறியது, அது அணியின் வெற்றி வாய்ப்புகளை வெகுவாக பாதித்தது என குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்திய அணிக்கு கொடுக்கப்பட்ட பணிச்சுமை மேலாண்மை இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய தவறு எனவும் தனது கருத்தை முன்னாள் கிரிக்கெட் வீரரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்