புத்தாண்டில் வெளியான ஷாக்கிங் தகவல்.! இந்தியாவில் அதிகரிக்கும் சுவாசநோய் பிரச்சனைகள்.!
புத்தாண்டில் வெளியான தகவலின் படி, காற்று மாசு காரணமாக சுவாச பிரச்சனையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையானது 30 சதவீதம் அதிகரித்து உள்ளது.
வருடா வருடம் இந்த குளிர்காலத்தில் காற்றில் அதிக மாசு தங்குவதால் காற்று மாசு அதிகரித்து அது மக்களுக்கு சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என மருத்துவ அறிக்கை கூறுகிறது. இருப்பினும் மழைபெய்து காற்று மாசுவை வெகுவாக குறைத்துவிடும்.
இருந்தாலும், தற்போது காலநிலை மாற்றம் பெற்று வருவதால் இந்த காற்று மாசு வருடந்தோறும் அதிகரித்து வருகிறது என்கிறது மருத்துவ அறிக்கைகள். இந்தாண்டு புத்தாண்டில் வெளியான தகவலின் படி, காற்று மாசு காரணமாக சுவாச பிரச்சனையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையானது 30 சதவீதம் அதிகரித்து உள்ளது என்பதாகும்.
மூச்சுக்குழாய் அழற்சி, மார்பு நோய்த்தொற்றுகள், நிமோனியா, ஆஸ்துமா மற்றும் சி.ஓ.பி.டி அதிகரிப்பு போன்ற சுவாச நோய்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டு உள்ளது. காற்று மாசுவால் அதிகம் பாதிக்கப்படுவாது ஏற்கனவே மூச்சு பிரச்சனைகள் இருப்பவர்கள் தான். எனவும் பிரபல மருத்துவர்கள் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றன.