தியேட்டர்களை திருவிழாவாக்க தயாரான விஜய் – அஜித்.! ஒரே நாளில் ‘துணிவு – வாரிசு’.!
அஜித் -விஜய் படங்கள் தனி தனியாக வெளியானலே எந்த அளவிற்கு கொண்டாட்டம் இருக்கும் என்பதை சொல்லியே தெரியவேண்டாம். இதில் இரண்டு திரைப்படங்களும் ஒரே தினத்தில் வெளியானால் அதனுடைய கொண்டாட்டத்தை பற்றி சொல்லியா..? தெரியவேண்டும். கண்டிப்பாக தமிழ் நாடே திருவிழா போல தான் இருக்கும்.
இந்த நிலையில், கடைசியாக கடந்த 2014-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டுஅஜித் நடித்த வீரம் படமும், விஜய் நடித்த ஜில்லா திரைப்படமும் ஒரே தினத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமைந்தது. இரண்டு படமும் பிளாக் பஸ்டர் ஹிட்டானது.
இதனை தொடர்ந்து கிட்டத்தட்ட 9 -ஆண்டுகளுக்கு பிறகு அஜித் -விஜய் படங்கள் ஒரே தினத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அஜித் நடித்துள்ள ‘துணிவு’ திரைப்படமும், விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படமும் வரும் ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதனை இரண்டு படங்களின் தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. இரண்டு படமும் பெரிய படம் என்பதால், இதில் எந்த படம் அதிகம் வசூல் செய்து சாதனை படைக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எந்த படம் முதல் நாளில் அதிகம் வசூல் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.