டெல்லியை தொடர்ந்து உ.பியில் நடந்த கொடூர சம்பவம்.! டிரக்கில் இழுத்து செல்லப்பட்ட பெண் மரணம்.!
டெல்லியை போலவே உத்திர பிரதேசத்தில் ஒரு பெண் டிரக் வாகனத்தில் சிக்கி சில கிமீ இழுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.
டெல்லியில் புத்தாண்டு அன்று 20 வயது இளம்பெண்ணை காரில் வந்தவர்கள் இடித்து விபத்து ஏற்படுத்தி அந்த பெண் காருக்கு அடியில் சிக்கி, சாலையில் சில கிமீ இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்தியது.
தற்போது அதே போன்ற சம்பவம் உத்திர பிரதேசத்தில் பண்டா மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. அம்மாவட்டத்தில் மாவாய் புசுர்க் எனும் கிராமத்தில் புஷ்பா எனும் பெண் அருகில் உள்ள கடைக்கு வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க ஸ்கூட்டியில் வந்துள்ளார்.
அப்போது அந்த வழியாக வந்த டிரக் மீது மோதி விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் டிரக்கிற்கு அடியில் அந்த பெண் பரிதாபமாக சிக்கி கொண்டார். இதில் டிரக்கின் சேஸ் பகுதியில் மாட்டிக்கொண்டதால் டிரக் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதனை அடுத்து வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது.
அதன் பிறகு தீயணைப்பு துறையினர் வந்து தீயை அனைத்து உடலை மீட்டுள்ள்ளனர். அந்த பெண் டிரக்கில் மாட்டிக்கொண்ட பிறகும் 3 கிமீ தூரம் இழுத்து சென்றதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
बांदा में स्कूटी सवार यूनिवर्सिटी टीचर को ट्रक ने 3 KM तक घसीटा, महिला के साथ स्कूटी हुई जलकर राख।
टक्कर के बाद ट्रक में भी लगी आग।
घटना की सूचना मिलने पर पुलिस सहित फायर ब्रिगेड की टीम मौके पर पहुंची।
महिला के शव को निकालने का किया जा रहा है प्रयास।#Banda #UttarPradesh pic.twitter.com/lI1fIgU70U
— UP Tak (@UPTakOfficial) January 4, 2023