அதிர்ச்சி : மே.வங்கத்தில் 4 பேருக்கு பிஎப்7 கொரோனா தொற்று..!
மேற்கு வங்காளத்தில் நான்கு பேருக்கு பிஎப்7 கொரோனா தொற்று உறுதி
சீனா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் புதிய வகை கொரோனா தொற்றான பி எப் 7 பரவி வரும் நிலையில் தற்போது இந்தியாவில் தொற்று பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் மேற்கு வங்காளத்தில் நான்கு பேருக்கு பிஎப்7 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும் அமெரிக்காவிலிருந்து வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்று உறுதி செய்யபட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.