இந்தியாவிற்கான எல்ஜி நிறுவன எம்டி யாக, ஹாங் ஜூ ஜியோன் நியமனம்.!
இந்தியாவிற்கான எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின், நிர்வாக இயக்குனராக ஹாங் ஜூ ஜியோன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், தனது இந்திய வணிகத்தின் நிர்வாக இயக்குநராக ஹாங் ஜூ ஜியோனை நியமிப்பதாக அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக ஜியோன், வளைகுடா பிராந்தியத்தின் எல்ஜியின் துணைத் தலைவர் பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் இந்தியாவின், முன்னாள் நிர்வாக இயக்குனரான(எம்டி) யங் லக் கிம், நிர்வாகத்தின் துணைத் தலைவராக பதவி உயர்வு பெற்றுள்ளதாக எல்ஜி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.