கடந்த 24 மணி நேரத்தில் 2 முறை தாக்குதலுக்கு உள்ளான வந்தே பாரத் ரயில்..!
கடந்த 24 மணி நேரத்தில் 2 முறை தாக்குதலுக்கு உள்ளான வந்தே பாரத் ரயில்.
கடந்த டிச.30-ஆம் தேதி பிரதமர் மோடி, மேற்கு வங்கத்தில் ஹவுரா – நியூஜல் பைகுரி இடையே வந்தே பாரத் ரயில் சேவையை காணொளி மூலம் தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், நேற்று வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இன்று 2-வது முறையாக மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் வந்தே பாரத் ரயில் 2 முறை விபத்துக்குள்ளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.