பெங்களூரு விமான நிலையத்தில் பெண்ணின் சட்டையை கழட்ட சொன்ன ஊழியர்கள்.? வருத்தம் தெரிவித்த நிர்வாகம்.!
பெங்களூரு விமான நிலையத்தில் ஒரு பெண்ணின் சட்டையை கழற்ற சொன்ன விவகாரம் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
பெங்களூரூ விமான நிலையத்தில் பயணிகளிடம் வழக்கமாக நடைபெறும் பாதுகாப்புச் சோதனையின் போது அங்கு வந்திருந்த ஒரு பெண்ணின் சட்டையை கழற்ற சொன்னதாக சம்பந்தப்பட்ட அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
அந்த பெண் கூறுகையில், ‘அங்கே (விமான நிலையத்தில்) நிற்பது உண்மையில் அவமானமாக இருந்தது. வெறும் உள்சட்டை அணிந்து, ஒரு பெண்ணாக நாங்கள் விரும்பாத கவனத்தைப் பெற்றேன். ‘ என பெண் பயணி கிரிஷானி காத்வி கூறினார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக பெங்களூரு விமான நிலைய நிர்வாகம் கூறுகையில், ‘ தொந்தரவுக்கு நாங்கள் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து கொள்கிறோம். இதை நாங்கள் எங்கள் செயல்பாட்டு குழுவிடம் எடுத்துரைத்துள்ளோம்.’ என தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்துள்ளது.