18 வயது வரையில் கணக்கு பாடம் கட்டாயம்.! இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் புதிய முடிவு.!
18 வயது வரை அனைவரும் கணக்கு பாடத்தை கட்டாயமாக கற்க வேண்டும் என்கிற திட்டத்தை ரிஷி சுனக் விரைவில் இங்கிலாந்தில் அமல்படுத்துவார் என கூறப்படுகிறது.
இங்கிலாந்தில் அண்மையில் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பதவியேற்றார். அவர் தற்போது இங்கிலாந்து குழந்தைகளின் கல்வி நலனுக்காக புதிய முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, இங்கிலாந்தில் பயிலும் அனைத்து மாணவர்களும் 18 வயது வரை கணக்கு பாடத்தை கட்டாயமாக கற்க வேண்டும் என்கிற திட்டத்தை ரிஷி சுனக் விரைவில் அறிவிப்பார் என கூறப்படுகிறது .
கனடா, ஜெர்மனி, பின்லாந்து, ஜப்பான் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் 18 வயது வரை கணிதம் கட்டாயம் படிக்க வேண்டும் என்பது அமலில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.