பொங்கல் பரிசு: வங்கிக் கணக்கில் செலுத்த வாய்ப்பில்லை – அமைச்சர் பெரியகருப்பன்
பொங்கல் பரிசு 1000 ரூபாயை திட்டமிட்டபடி ரேஷன் கடைகளிலேயே பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சர் தகவல்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் நியாயவிலை கடைகளில் பொங்கல் பரிசாக ரூ.1000 ரொக்கம் பணம், ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சக்கரை வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசு விநியோகம் செய்வதற்கான டோக்கன் வழங்கும் பணி நேற்று தொடங்கியது.
இதனிடையே, பொங்கல் பரிசாக ரூ.1000 ரொக்கப் பணம் நேரடியாக குடும்ப அட்டைதாரர்களின் வங்கியில் செலுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், பொங்கல் பரிசு 1000 ரூபாயை வங்கிக் கணக்கில் செலுத்த வாய்ப்பில்லை என்றும் திட்டமிட்டபடி ரேஷன் கடைகளிலேயே பெற்றுக் கொள்ளலாம் எனவும் அமைச்சர் பெரியகருப்பன் தகவல் தெரிவித்துள்ளார்.