முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடக்கம்.!
இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் நடைபெற்று வருகிறது.
வரும் திங்கள் கிழமை தமிழக சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு, ஆளுநர் உரையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சர்கள் பங்குபெறும் ஆலோசனை கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. 10 அமைச்சர்களின் துறை மாற்றப்பட்ட பிறகு, உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் அமைச்சரவை கூட்டம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.