தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு!

Default Image

பயிற்சித் தேர்வு மேற்கொள்ள விரும்பும் தேர்வர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு.

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை கடந்த ஆண்டு மார்ச்சியில் வெளியிடப்பட்டது. இணையவழி வாயிலாக விண்ணப்பத்தினை விண்ணப்பதாரர்கள் டந்த ஆண்டு மார்ச் 14 முதல் பதிவேற்றம் செய்திடலாம் என தெரிவிக்கப்பட்டது.

மேலும், விண்ணப்பதாரர் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய 26.04.2022 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. அதில் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தற்பொழுது ஜனவரி மாதம் 31 முதல் பிப்ரவரி மாதம் 12 வரை உள்ள தேதிகளில் தாள் II ற்கு உரிய தேர்வுகள் கணினி வழியில் மட்டுமே நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

கணினி வழித் தேர்விற்காக (Computer Based Examination) பயிற்சித் தேர்வு (Practice Test) மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்வதற்கு, தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும்.  அனைத்து தேர்வர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம். தேர்வு கால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு (Admit card) வழங்கும் விவரம் ஜனவரி மூன்றாம் வாரத்தில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்