பெண் மீது குடிபோதையில் சிறுநீர் கழித்த நபர்.. “நோ-ஃப்ளை” பட்டியலில் சேர்க்க கோரிக்கை!
ஏர் இந்தியா விமானத்தில் பெண் மீது குடிபோதையில் சிறுநீர் கழித்த நபரை ‘நோ-ஃப்ளை’ பட்டியலில் சேர்க்க விமான நிறுவனம் கோரிக்கை.
அமெரிக்கா-டெல்லி ஏர் இந்தியா விமானத்தின் வணிக வகுப்பில் பயணித்த பெண் பயணி மீது ஒருவர் குடிபோதையில் சிறுநீர் கழித்ததாகக் கூறப்படுகிறது. விமானத்தின் வணிக வகுப்பு கேபினில் நடந்த இந்த சம்பவம் குறித்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நவம்பர் 26, 2022 அன்று நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட பயணியை விமானம் பயண தடை பட்டியலில் சேர்க்க விமான நிறுவனம் பரிந்துரைத்தது.
இதுதொடர்பாக ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த சம்பவத்தில் ஏர் இந்தியா ஒரு உள் குழுவை அமைத்து, அந்த நபரை ‘நோ-ஃப்ளை லிஸ்டில்’ சேர்க்க பரிந்துரைத்துள்ளது. இந்த விவகாரம் அரசாங்கக் குழுவின் கீழ் உள்ளதால் முடிவுக்காக காத்திருக்கிறோம் என கூறினார்.