உடல் எடையை குறைப்பதற்காக மருந்து வாங்கி சாப்பிட்ட இளைஞர் பலி..!
உடல் எடையை குறைப்பதற்காக மருந்து வாங்கி சாப்பிட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சூர்யா(20) என்ற இளைஞர் பால் விநியோகம் செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இந்த நிலையில், இவர் தனது உடல் எடையை குறைக்க விரும்பியுள்ளார்.
இதனால், சூர்யா உடல் எடையை குறைப்பதற்காக தனியார் நிறுவனத்தை அணுகி மருந்து வாங்கி சாப்பிட்டுள்ளார். இந்த மருந்தை சாப்பிட்ட இளைஞர் சூர்யா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.