செல்போன் பயன்படுத்தியதால் 89 ராணுவ வீரர்கள் பலி – ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தகவல்
உக்ரைன் தாக்குதலில் 89 பேர் கொல்லப்பட்டதற்கு ராணுவ வீரர்கள் செல்போன் பயன்படுத்தியதாக ரஷ்யா குற்றசாட்டு.
ராணுவ வீரர்கள் தங்கள் மொபைல் போன்களை பயன்படுத்தியதால் புத்தாண்டு அன்று உக்ரைன் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 89 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 1 நள்ளிரவுக்குப் பிறகு டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் ரஷ்ய ஆக்கிரமிப்புப் பகுதிகளில் உள்ள மக்கிவ்காவில் உக்ரைன் தாக்குதல் நடத்தியது. தடை செய்யப்பட்ட தொலைபேசிகளை ராணுவ படையினர் பயன்படுத்தியதால் “எதிரி” தனது இலக்கைக் கண்டறிய சுலபமாக இருந்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.