முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்..!
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் பொங்கல் விடுமுறை கழித்து தொடங்கும் என கூறப்பட்ட நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.
இந்த அமைச்சரவை கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். முதன் முறையாக புதியதாக பதவியேற்ற அமைச்சர் உதயநிதியும் இதில் பங்கேற்கிறார். இதில் , சட்டப்பேரவை துவங்கும் போது அதில் ஆளுநர் உரையில் இடம்பெறஉள்ளவை, புதிய சட்ட மசோதாக்கள், துறைகள் மாற்றப்பட்டு, புதிய பொறுப்பேற்ற அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.