ரங்கராஜ் பாண்டேவின் தந்தை மறைவுக்கு, முதல்வர் நேரில் இரங்கல்.!
ரங்கராஜ் பாண்டேவின் தந்தை ரகுநாதாசார்யா மறைவுக்கு முதல்வர் நேரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல பத்திரிகையாளரான ரங்கராஜ் பாண்டேவின் தந்தை ரகுநாதாசார்யா நேற்றிரவு சென்னையில் காலமானார். பாண்டேவின் தந்தையின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் , சினிமா பிரபலங்கள் என பலரும் நேரில் சென்றும், சமூக வலைத்தளங்களின் மூலமும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாண்டேவின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது தந்தையின் உருவப்படத்திற்கு தன் அஞ்சலியை செலுத்திவிட்டு, பாண்டேவிற்கு தனது இரங்கலையும் ஆறுதலும் தெரிவித்துள்ளார்.