100 டி20 வீரர்களைக் கொண்ட 2-வது நாடு இந்தியா!
ஷுப்மன் கில் மற்றும் ஷிவம் மாவி ஆகியோர் இந்திய அணியின் 100 மற்றும் 101ஆவது டி-20 வீரராக இன்று அறிமுகமாகியுள்ளனர்.
டி-20 போட்டிகளில் 100 வீரர்களைக் கொண்ட இரண்டாவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இலங்கைக்கு எதிரான இந்தியாவின் முதல் டி20 போட்டியில் பேட்டர் ஷுப்மன் கில் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஷிவம் மாவி ஆகியோர் டி-20 கிரிக்கெட்டில் அறிமுகமாகின்றனர்.
இதன்மூலம் டி-20 போட்டிகளில் ஆஸ்திரேலியாவிற்கு அடுத்தபடியாக 100 வீரர்களை அறிமுகம் செய்த இரண்டாவது அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இதற்கிடையில், டி-20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவிற்காக 103 வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.