ஓடிபி லெஸ் நிறுவனத்தின் சிஇஓ ஆகிறார், பாரத்பே இணை நிறுவனர் பாவிக் கொலடியா.!
பாரத்பே இணை நிறுவனர் பாவிக் கொலடியா, ஓடிபி லெஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) ஆகிறார்.
பாரத்பேவின் இணை நிறுவனர் பாவிக் கொலடியா, ஃபின்டெக் மென்பொருள் நிறுவனமான ஓடிபி லெஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) ஆக நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர், இந்த 2023ஆம் வருடம் மிகவும் உற்சாகமாக இருக்கும் என்று ட்வீட் செய்துள்ளார்.
பாரத்பேயின் தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு பிரிவுகளின் ஆலோசகராக இருந்து வந்த கொலடியா, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு ஓடிபி லெஸ் நிறுவனத்தில் குழு உறுப்பினராக சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.