பெற்றோருக்கு பாலின வேறுபாடு இல்லை…கவனத்தை ஈர்க்கும் “Congratulations”  பட போஸ்டர்.!

Default Image

ஷர்மா ஜோஷி தனது குஜராத்தி திரைப்படமான “Congratulations” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளார். 

இயக்குனர் ரெஹான் சவுத்ரி எழுதி இயக்கியுள்ள குஜராத் திரைப்படம் “Congratulations” இந்த படத்தில் ஷர்மா ஜோஷி முதன்மை கதாபாத்திரத்திலும், மானசி பரேக் கோஹில், ஜெயேஷ் பர்பஹ்யா, அமி பயானி, அர்ச்சன் திரிவேதி, ஸ்வாதி டேவ் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதியுடன் அறிவிக்கப்பட்டுள்ளது.  பர்ஸ்ட் லுக் போஸ்டரில், ஷர்மன் நிறைமாத கர்ப்பிணியாகக் காணப்படுகிறார். மேலும் போஸ்டரில் “பெற்றோருக்கு பாலினம் இல்லை” என்று எழுதப்பட்ட மஞ்சள் டி-ஷர்ட்டில் போஸ் கொடுத்துள்ளார்.

இப்படத்தில் அவர் கர்ப்பமாக இருக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என தெரிகிறது. இந்த திரைப்படம் பிப்ரவரி 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. போஸ்டரில் இடம்பெற்றுள்ள “பெற்றோருக்கு பாலின வேறுபாடு இல்லை” என்ற வாசகத்துடன் வெளிவந்துள்ளதால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sharman Joshi (@sharmanjoshi)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்