பாரத் பே நிறுவன சிஇஓ, சுஹைல் சமீர் ராஜினாமா.!
பாரத் பே நிறுவனத்தின் சிஐஓ, சுஹைல் சமீர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்தியாவின் ஆன்லைன் வணிக தளமான, பாரத்பே நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (சிஐஓ) ஆக இருந்த சுஹைல் சமீர், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் ஜனவரி 7 முதல் நிறுவனத்தின் முக்கிய ஆலோசகராக பதவி வகிப்பார் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி, நளின் நேகி இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். பாரத்பே நிறுவனத்தில், சமீப காலங்களில் பல மூத்த நிர்வாகிகள் வெளியேறி வருகின்றனர். மேலும் முக்கிய அதிகாரிகளான அஷ்னீர் குரோவர் மற்றும் அவரது மனைவி மாதுரி ஜெயின் ஆகியோரும் சமீபத்தில் வெளியேற்றப்பட்டனர்.