சவுதி அரேபியா வந்தார், ரொனால்டோ! அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடும் கிளப்.!
அல்-நஸ்ர் கிளப்பில் இணையும் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடும் நிகழ்வை முன்னிட்டு, ரொனால்டோ, சவுதி அரேபியா வந்தடைந்தார்.
போர்ச்சுகல் கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது புதிய கிளப் அணியான அல்-நஸ்ர் கிளப்பில் இணையும் அதிகாரபூர்வ நிகழ்வு மற்றும் மருத்துவ பரிசோதனையை முன்னிட்டு சவுதி அரேபியாவின் ரியாத்திற்கு வந்துள்ளார்.
அல்-நஸ்ர் கிளப், ரொனால்டோவை தங்களது அணி வீரராக இன்று ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் அதிகாரபூர்வமாக அறிவிக்கிறது. அல்-நஸ்ரின் 25,000 பேர் கொண்ட மிர்சூல் பார்க் மைதானத்தில், இந்த நிகழ்வு இரவு 7 மணிக்கு நடைபெறவிருக்கிறது.
அல்-நஸ்ர் கிளப் தலைவர் முசல்லி அல்-முஅம்மர் மற்றும் அல்-நஸ்ரின் தலைமை பயிற்சியாளர் ரூடி கார்சியாவும் இந்நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரொனால்டோ, அல்-நஸ்ர் கிளப்பில் ரூ.4,400 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.