புத்தாண்டில் நற்செய்தி..! சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்..!
ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான மருத்துவ பயன்பாட்டுத் திட்டப் பட்டியலில் சித்தா மற்றும் யுனானி சேர்த்ததற்கு சு.வெங்கடேசன் எம்.பி நன்றி தெரிவித்து ட்விட்.
ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான மருத்துவ பயன்பாட்டுத் திட்டப் பட்டியலில் சித்தா மற்றும் யுனானி சேர்க்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘புத்தாண்டில் நற்செய்தி. ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான மருத்துவ பயன்பாட்டுத் திட்டப் பட்டியலில் சித்தா மற்றும் யுனானி சேர்ப்பு. எமது கோரிக்கையை ஏற்று அமைச்சர் மான்சுக் மாண்டவியா நடவடிக்கை. விரைவில் வழிகாட்டல்கள் வெளியாகும். அமைச்சருக்கு நன்றி.’ என பதிவிட்டுள்ளார்.