மாணவர்கள் கவனத்திற்கு! நாளை முதல் ஹால் டிக்கெட்…
12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவிப்பு.
தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட உள்ளது என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து பள்ளிகளும், நாளை பிற்பகல் 2 மணி முதல் தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து மாணவர்களின் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, 10,11,12 வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்று தேர்வுத்துறை அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.