சில தினங்களுக்கு பிரதமர் மோடி துவக்கி வைத்த வந்தே பாரத் ரயில் மீது கல் வீச்சு!
நியூஜால்பைக்குரியில் இருந்து ஹவுரா சென்ற வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல்
கடந்த டிச.30-ஆம் தேதி தாயின் இறுதிச்சடங்கு நடத்தி முடித்து சில மணி நேரங்களிலேயே பிரதமர் மோடி, மேற்கு வங்கத்தில் ஹவுரா – நியூஜல் பைகுரி இடையே வந்தே பாரத் ரயில் சேவையை காணொளி மூலம் தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், நியூஜால்பைக்குரியில் இருந்து ஹவுரா சென்ற வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.