தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை; சட்ட விரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறது! – ஓபிஎஸ்

Default Image

பொதுமக்களுக்கு பாதுகாப்பு அரணாய் விளங்கும் காவல் துறையினருக்கே பாலியல் தொந்தரவு கொடுக்கும் அளவிற்கு சென்றிருப்பது கண்டனத்துக்குரியது என ஓபிஎஸ் அறிக்கை. 

சென்னை விருகம்பாக்கத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரை இரண்டு திமுக இளைஞரணி நிர்வாகிகள் பாலியல் தொந்தரவு கொடுத்தது குறித்த செய்திகள் வெளியாகியிருந்தது.

இதற்கு அரசியல் கண்டனம் தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கை சீரழித்த திமுக, தற்போது பொதுமக்களுக்கு பாதுகாப்பு அரணாய் விளங்கும் காவல் துறையினருக்கே பாலியல் தொந்தரவு கொடுக்கும் அளவிற்கு சென்றிருப்பது கண்டனத்துக்குரியது. தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை; சட்ட விரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறது!’ என தெரிவித்துள்ளார்.

ops dmk

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்