டெல்லி சம்பவம்.! வெளியான புதிய சிசிடிவி காட்சிகள்.! அந்த புதிய பெண் யார்.?
டெல்லியில் காருக்கு அடியில் இழுத்து செல்லப்பட்டு இளம்பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இன்னொரு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
டெல்லியில் புத்தாண்டு தினத்தன்று அதிகாலையில் ஸ்கூட்டியில் சென்ற 20 வயது பெண்ணை காரில் வந்த 5 நபர்கள் இடித்து விபத்து ஏற்படுத்தினர். இதில் காருக்கு அடியில் சிக்கிய அந்த பெண் சில கிமீ தூரம் சாலையில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்தார்.
இந்த கோர விபத்தை அடுத்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து, கார் பதிவெண்ணை வைத்து காரில் பயணித்த 5 பேரை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களுக்கு உரிய தண்டனை விரைவாக வழங்க வேண்டும் என குரல்கள் நாடெங்கிலும் இருந்து வலுத்து வருகிறது.
இந்த சமயம் இன்னோர் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. அதில் அந்த அந்த 20 வயது பெண்ணுடன் இன்னோர் பெண் இருக்கிறார். இது பற்றி காவல் துறையினர் கூறுகையில், அந்த இரண்டாவதாக இருக்கும் பெண், உயிரிழந்த பெண்ணின் தோழி. கார் மோதியதும் இவர் லேசான காயங்களுடன் தப்பித்துவிட்டார். உயிரிழந்த பெண்ணின் கால்கள் கார் வீலுக்குள் மாட்டிவிட்ட்டன. அதனால் தான் அவர் இழுத்து செல்லப்பட்டார் என விளக்கம் கொடுத்துள்ளனர்.