பதக்கத்தை பாதுகாக்க 20 லட்சம் மதிப்புள்ள காவல் நாய் வாங்கிய அர்ஜென்டினா கோல்கீப்பர்!
உலகக் கோப்பை பதக்கத்தைப் பாதுகாக்க அர்ஜென்டினா கோல்கீப்பருக்கு ரூ.20 லட்சம் மதிப்புள்ள புதிய காவலாளி நாய் கிடைத்துள்ளது.
2022 FIFA உலகக் கோப்பை வெற்றியாளரின் பதக்கத்தைப் பாதுகாப்பதற்காக 20,000 பவுண்டுகளுக்கு (கிட்டத்தட்ட ரூ.20 லட்சம்) அர்ஜென்டினா கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ் காவல் நாயை வாங்கியுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எமிலியானோ மார்டினெஸ் சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பெல்ஜிய மாலினோயிஸ் காவல் நாயை வாங்கியுள்ளார்.
இந்த பெல்ஜிய மாலினோயிஸ் காவல் நாய் SAS மற்றும் அமெரிக்க கடற்படை போர் மண்டலங்களில் பயன்படுத்தப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது. 2022 FIFA உலகக் கோப்பை வென்ற அர்ஜென்டினா கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ் இங்கிலாந்தில் உள்ள ஆஸ்டன் வில்லாவுக்காக கிளப் கால்பந்து விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.