சென்னை கடற்கரையில் மக்கள் உல்லாசமாய் பறக்க அரசு தீவிர ஏற்பாடு.!
சென்னையில் கடற்கரையில் ரோப் கார் சேவை அமைக்க அரசு திட்டமிட்டு அதற்கான வேலைகளை தற்போது தொடங்கியுள்ளது.
சென்னையில், கலங்கரை விளக்கம் (லைட் ஹவுஸ்) முதல் பெசன்ட் நகர் கடற்கரை வரையில் இடையே 4.6கிமீ தூரத்திற்கு ரோப் கார் சேவை அமைக்க அரசு திட்டமிட்டு இருந்தது.
தற்போது அதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை தயாரிக்கும் பணியில் மத்திய சாலைப்போக்குவரத்து & நெடுஞ்சாலை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. இவர்கள் ஆய்வு செய்து அந்த பகுதியில் அமைக்கலாம் என முடிவு செய்த பின்னர் ரோப் கார் சேவை பணிகள் தொடங்க ஆரம்பிக்கும்.