போதைப்பொருட்கள் விற்பனை – முதலமைச்சர் அவசர ஆலோசனை!
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை தடுப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை.
போதைப்பொருட்கள் விற்பனை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள், பள்ளிக்கல்வித்துறை செயலர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
போதைப்பொருள் புழக்கத்தை தடுப்பது குறித்தும், மாணவர்களிடையே போதைப்பொருளின் தீமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது பற்றியும் விவாதிக்கப்படுகிறது. மேலும், போதைப்பொருள் கும்பல் இலங்கையில் இருந்து தமிழகத்திற்குள் ஊடுருவியதாக வெளியான தகவல் குறித்தும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.