நீலகிரி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை!
அம்மன் கோயில் பண்டிகையை முன்னிட்டு நாளை நீலகிரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
நீலகிரி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்களின் குல தெய்வமான ஹெத்தை அம்மன் கோயில் பண்டிகையை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை அறிவித்துள்ள விடுமுறைக்கு மாற்றாக வரும் 21-ல் அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.