Sensex: பங்குச்சந்தை உயர்வு! சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்குமேல் அதிகரித்தது.!
பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 327 புள்ளிகள் உயர்ந்து 61,167 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,197 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
2023 ஆம் ஆண்டின் முதல் வர்த்தக நாளான இன்று மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 327 புள்ளிகள் அல்லது 0.54% என உயர்ந்து 61,167 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ(NSE) நிஃப்டி 92 புள்ளிகள் அல்லது 0.51% உயர்ந்து 18,197 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 60,840 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,105 ஆகவும் நிறைவடைந்தது.