கிரிக்கெட் வீரர்கள், டிரைவர்கள் வைத்துக்கொள்ளவேண்டும்- கபில் தேவ்
வீரர்கள் தானாக வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் என்று கபில் தேவ் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த், தானாக கார் ஓட்டிச்சென்று விபத்தில் சிக்கியதையடுத்து, வீரர்கள் டிரைவர்கள் வைத்துக் கொள்ளவேண்டுமென முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார்.
1983 உலகக்கோப்பையை வென்றவருமான முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் இது குறித்து கூறியதாவது, வீரர்கள் எப்பொழுதும் கவனமாக இருக்கவேண்டும், நாமே வாகனத்தை ஓட்டிச்செல்லவேண்டும் என்று அவசியமில்லை, டிரைவர்கள் வைத்துக்கொள்ளலாம்.
எனக்கு தெரியும் கார் ஓட்டுவதில் நிறைய பேருக்கு ஆர்வம் இருக்கிறது என்று, ஆனால் உங்களுக்கென்று பொறுப்பு இருக்கிறது, நீங்கள் உங்களை கவனித்துக்கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.