பாமகவுக்கு அடையாளம் குடுத்ததே நாங்கதான் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுகவை வீணாக சீண்டினால் தக்க பதிலடி கொடுப்போம் என அன்புமணி ராமதாஸ் முன்வைத்த விமர்சனத்திற்கு ஜெயக்குமார் பதில்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், ஒருபக்கம் வருத்தமும், வேதனையும், ஒரு பக்கம் கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம் என அதிமுக நான்காக உடைந்துள்ளது, அடுத்து தமிழகத்தில் மிகப்பெரிய கட்சி நாங்கள் தான் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முன்வைத்த விமர்சனத்திற்கு பதிலளித்தார்.
அதிமுகவுடன் கூட்டணி வைத்த பிறகுதான் பாமகவுக்கு அங்கீகாரம் கிடைத்தது. பாமகவுக்கு அடையாளம் கொடுத்ததே நாங்கதான். நீங்க இப்போ எம்.பி.யா இருக்குறது யாரால? என கேள்வி எழுப்பினார். தற்போது நன்றி மறந்து பேசுகிறார் அன்புமணி ராமதாஸ். இதனை தமிழ்நாடு மக்கள் மட்டுமின்றி, பாமக தொண்டர்கள் கூட மதிக்கமாட்டார்கள் என விமர்சித்தார்.
உங்கள் கட்சியை குறித்து ஆயிரம் பேசுங்கள், ஒரு பலம் வாய்ந்த அதிமுகவை சிறுமைப்படுத்தி பேசினால், அது உண்மையாகிவிடுமா, யாரும் அதிமுகவை சிறுமைப்படுத்த முடியாது. அதிமுக கொடுத்ததால் தான் இன்று எம்பியாக இருக்கிறார் அன்புமணி ராமதாஸ். எனவே, இதுபோன்று சிறுமைப்படுத்துகின்ற வேலையை பார்க்க வேண்டாம். அப்படி வீணா சீண்டினால் கண்டிப்பாக தக்க பதிலடி நாங்களும் கொடுப்போம் என தெரிவித்தார்.