சென்னை ஆட்சியர் அலுவலகம் முன் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்..!
சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொரோனா பெருந்தொற்று தடுப்புப் பணிகளுக்காக தொகுப்பூதிய அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களை, தமிழ்நாடு அரசு பணிநீக்கம் செய்து உத்தரவிட்டதுள்ளது.
இதற்கு எதிராக, சேலம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.