ரஷ்யாவை அழிக்க மேற்கு நாடுகள், உக்ரைனை பயன்படுத்துகின்றன- புதின்
ரஷ்யாவை அழிக்க மேற்கு நாடுகள் உக்ரைனை பயன்படுத்திக்கொள்வதாக அதிபர் புதின், குற்றம் சாட்டியுள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் போர் கடந்த பிப்ரவரி 2022 இல் தொடங்கி, கிட்டத்தட்ட 10 மாதங்களாக நடந்து வருகிறது. நாளுக்கு நாள் போரின் சூழ்நிலை மோசமாகி வருகிறது.
உக்ரைனுக்கு பல மேற்கு நாடுகள் ஆயுதங்கள் கொடுத்து உதவி வருவதாக தகவல் வெளிவந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின் புத்தாண்டை முன்னிட்டு, நீண்ட உரையை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, ரஷ்யா-உக்ரைன் இடையே அமைதியை நிலை நாட்டுவதாகக் கூறி மேற்கு நாடுகள் உக்ரைனை பயன்படுத்தி ரஷ்யாவை அழிக்க திட்டம் தீட்டி வருகின்றன.
அவர்கள் ரஷ்யாவை வலுவிழக்க செய்வதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர். அதற்கு உக்ரைன் மக்களை பயன்படுத்துகின்றனர். நாம் ஒன்றாக, அனைத்து சிரமங்களையும் சமாளிப்போம். எங்கள் குடும்பங்களுக்காகவும், ரஷ்யாவுக்காகவும் வெற்றி பெறுவோம், என்று அவர் மேலும் கூறினார். இந்த உரை புதினின் 22 ஆட்சிகால வரலாற்றில் மிக நீண்ட உரை என்பது குறிப்பிடத்தக்கது.