தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்…பிரபல நடிகர் ட்வீட்.!
வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக தொடர்ந்து தனது 67-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக தளபதி 67 – என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
படத்திற்கான பூஜை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. பூஜையை மட்டும் அறிவிக்காமல் ஒரு குட்டி டீஸருடன் அறிவிப்பை வெளியிட படக்குழு காத்துள்ளனர். இந்த திரைபடத்தில் நடிகர் மன்சூர் அலிகான், இயக்குனர் கெளதம் மேனன். இருவருமே தளபதி 67 படத்தில் நடிப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் உறுதிபடுத்தி இருந்தனர்.
இதையும் படியுங்களேன்- கவர்ச்சியை தாண்டி நடிப்பை காட்டுங்கள் என கூறியவர்களுக்கு ‘தர்ஷா குப்தா ‘ கொடுத்த பதிலடி…!
இதனையடுத்து, இயக்குனரும், நடிகருமான மனோ பாலா தனது ட்வீட்டர் பக்கத்தில் தளபதி 67 படத்திற்கான அப்டேட் ஒன்றை கொடுத்திருக்கார். அதன்படி “தளபதி 67- படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது… லோகேஷ் மற்றும் எங்கள் தளபதியை சந்தித்தார்… அதே ஆற்றல் மற்றும் முழு வீச்சில்.. முதல் நாளே.. தூள்..” என பதிவிட்டுள்ளார்.
இதனால் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர். விரைவில் படத்திற்கான டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தளபதி 67 திரைப்படம் 100% லோகேஷ் கனகராஜ் படமாக எடுக்கப்படவுள்ளதாகவும், ஏற்கனவே படத்தின் 2 பாடல்கள் தயார் செய்து முடித்துவிட்டதாகவும் லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.